நடுநடுங்க வைக்கும் குடும்பம்! பகலில் மனிதன்.. இரவில் பல்லி! ஊர் மக்களே பயந்து ஓடும் அந்த மர்ம வீடு! இருட்டு வந்தாலே உறுமாறும் உருவம்!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இரவில் உடல் செயலிழக்கும் குழந்தைகள் குறித்து உலக மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வரும் மர்ம சம்பவம்.
உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு விநோத சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பகலில் சாதாரண குழந்தைகளாக இருப்பவர்கள், இரவு நேரங்களில் முற்றிலும் மாறுபட்ட உடல் மாற்றங்களை எதிர்கொள்வது மர்ம நோய் எனப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரவில் மட்டும் நிகழும் விசித்திர மாற்றம்
சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் குழந்தைகள் பகல் நேரங்களில் இயல்பாக நடமாடி, விளையாடி வருகிறார்கள். ஆனால் சூரியன் மறைந்ததும், அவர்களின் உடல் இறுக்கமடைந்து, கைகள் மற்றும் கால்களின் விரல்கள் பல்லியைப் போல வளைந்து கொள்ளத் தொடங்குகின்றன. இந்த மாற்றம் முழு இரவும் நீடிப்பதாக கூறப்படுகிறது.
கிராமத்தை ஆட்டிப்படைக்கும் அச்சம்
இந்த அபூர்வ நிலையை நேரில் பார்த்த கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குழந்தைகளின் தோற்றம் மற்றும் இயக்கம் மாறுவதால், அவர்களை சிலர் “பல்லி மனிதர்கள்” என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மருத்துவ உலகுக்கு விடாத புதிர்
பல உயர்மட்ட மருத்துவக் குழுக்கள் ஆய்வு செய்தும், இந்த பாதிப்புக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது அரிய மரபணு நோய் ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சூரிய ஒளியில் நரம்பு மண்டலம் சாதாரணமாக செயல்படுவதும், இருள் சூழ்ந்தவுடன் தசைகள் செயலிழப்பதும் அறிவியலுக்கு பெரும் சவாலாக உள்ளது.
சர்வதேச கவனம்
ஒரே குடும்பத்தில் பலருக்கு ஒரே மாதிரியான பாதிப்பு இருப்பது மருத்துவ வரலாற்றில் மிக அரிது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, இந்த குடும்பத்தின் மர்மத்தைத் தீர்க்க பல சர்வதேச மருத்துவ நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த சம்பவம் மனித உடலின் செயல்பாடுகள் குறித்து இன்னும் எவ்வளவு அறிய வேண்டியுள்ளது என்பதை நினைவூட்டுகிறது. அறிவியல் முன்னேற்றங்கள் இந்த அறிவியல் சவால் நிறைந்த மர்மத்தை விரைவில் வெளிச்சம் போடுமா என்ற எதிர்பார்ப்பில் உலகமே காத்திருக்கிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு அரிய நோயா! சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்து தாய்லாந்து, சீன மொழியில் பேசிய பெண்கள்! வினோத நோயின் உண்மை பின்னணி!