தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

65 பேரின் உயிரை காவுவாங்கிய குண்டுவெடிப்பு: இந்தியாவே காரணம் - பாகிஸ்தான் பரபரப்பு குற்றசாட்டு.!

65 பேரின் உயிரை காவுவாங்கிய குண்டுவெடிப்பு: இந்தியாவே காரணம் - பாகிஸ்தான் பரபரப்பு குற்றசாட்டு.!

Pakistan Minister Sarfaraz Bugti Blames India RAW about Balochistan Bomb Blast  Advertisement

 

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் இரட்டை குண்டுவெடிப்பு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 65க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். 

100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், இவ்விஷயம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியாவின் உளவு அமைப்பான ரா காரணம் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் சர்பராஸ் புக்டி தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இந்திய அரசு விரைவில் இதற்கான மறுப்பு தொடர்பான செய்தியை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கனடாவும் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் மீது குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pakistan #Balochistan Bomb Blast #world #India #Raw
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story