பசிபிக் கடலடியில் மின்னும் மிகப்பெரிய அளவு தங்கம்.... சாதாரண பாறைகள் அல்ல! இயற்க்கையாக உருவான தங்க உற்பத்தி! விஞ்ஞானிகளே வியந்து போன ஆய்வு!!!
பசிபிக் கடலடியில் எரிமலைப் பகுதிகள் இயற்கை தங்கத் தொழிற்சாலைகளாக செயல்படுகின்றன என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பசிபிக் கடலின் ஆழப்பகுதியில் இயற்கையே உருவாக்கியுள்ள ஒரு அசாதாரண தங்க உருவாக்க முறை விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அருகே மேற்கொண்ட ஆய்வில், கடலடிப் பகுதிகள் தங்க உற்பத்திக்கு முக்கிய இடமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் தங்க இருப்பு குறைந்து வரும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு புதிய வாய்ப்பைத் திறக்கிறது.
கடலடியில் செயல்படும் இயற்கை தங்க உற்பத்தி
ஜெர்மனிய ஆய்வுக் குழு தென் பசிபிக் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், எரிமலைச் செயல்பாடுகள் தங்க உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது உறுதிசெய்யப்பட்டது. பூமியின் அடிப்பகுதியில் டெக்டோனிக் தகடுகள் நகரும் போது உருவாகும் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக பாறைகள் உருகுகின்றன. இதனால், சல்பருடன் இணைந்திருந்த தங்கம் பிரிந்து, எரிமலைக் குழம்புடன் மேலேறும்.
ஆய்வாளர்கள் சேகரித்த 66 எரிமலைக் கண்ணாடி மாதிரிகளை ஆய்வு செய்தபோது, சாதாரண பாறைகளைக் காட்டிலும் அதிக அளவில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது கடலடியில் நடைபெறும் இயற்கை செயல்முறையின் வலுவான சான்றாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.70,000 வரை குறையும் தங்கம் விலை.. விரைவில் வருகிறது நல்லசெய்தி?
எரிமலைக் குழம்பிலிருந்து கனிமப் படிமங்கள் வரை
கடலடியில் வெப்பமான எரிமலைக் குழம்பு வேகமாக குளிரும் போது, அதிலுள்ள தங்கம் மற்றும் தாமிரம் போன்ற கனிமங்கள் நீர்வெளியேற்ற துளைகள் வழியாக வெளிவந்து படிமங்களாக மாறுகின்றன. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, தொடர்ந்து நடைபெறும் புவியியல் செயல்முறை என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
நாம் சாதாரணமாகக் கருதும் ஆழ்கடல் பகுதிகளில் கூட, கணிக்க முடியாத அளவில் மதிப்புமிக்க கனிம வளங்கள் புதைந்து கிடப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்கால சுரங்கத் துறைக்கு புதிய பாதை
நிலப்பரப்பில் தங்க வளம் குறைந்து வரும் நிலையில், கடலடியில் உள்ள இத்தகைய படிமங்கள் எதிர்கால சுரங்கத் துறைக்கு முக்கிய திசை காட்டுகின்றன. உலக பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும், தங்கம் உருவாகும் முறையை ஆழமாக புரிந்துகொள்ளவும், கடல்சார் சுரங்க தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் இந்த ஆய்வு உதவும் என அறிவியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! அதிரடியாக சரியும் தங்கம் விலை! பின்னணியில் இருக்கும் அந்த ரகசியம் இதுதான் !!!