தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூன்றாம் உலகப்போரை தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உள்ளது... டொனால்ட் டிரம்ப் விமர்சனம்...!!

மூன்றாம் உலகப்போரை தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உள்ளது... டொனால்ட் டிரம்ப் விமர்சனம்...!!

Only I have the power to prevent World War III... Donald Trump Criticism... Advertisement

மூன்றாம் உலகப்போரை தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் இருக்கிறது. நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது, என்று டிரம்ப் கூறியுள்ளார்.

ரஷியா, உக்ரைன் போர் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் காணொளி மூலம் விமர்சனம் செய்துள்ளார். காணொளியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார், தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காக கையாளவில்லை. 

நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது. புதிர், நான் அதிபராக இருந்திருந்தால் போரை தொடங்கியிருக்க மாட்டார். நான் போரை நடத்த விட்டிருக்க மாட்டேன். போர் சூழல் உண்டானது தெரிந்தவுடன், பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். 

இப்போது அமெரிக்கா உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்குகிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை வழங்கப் போகிறது. இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மூன்றாம் உலகப் போர் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு. நான் என்ன சொன்னாலும் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார். இந்த போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல் ஆகாது. இந்த போரை நிறுத்த என்னால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #America #Donald trump #Ukraine Russia War #Speech Criticism
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story