×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா வைரஸ் மனிதனால் மட்டுமே உருவாகும்..! 1981ம் ஆண்டே வெளியான நாவல்…! சந்தேக சர்ச்சைகள்…!

Novel Corono virus predicted Wuhan virus 40 years before

Advertisement

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19 என்ற வைரசால் இதுவரை 2000 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவை தாண்டி உலக நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி 1981ம் ஆண்டே நாவல் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி இருக்கிறது.

1981ம் ஆண்டு வெளியான ‘தி ஐஸ் ஆப் டார்க்னஸ்’ (The Eyes of Darkness) என்ற நாவலில், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிப்பதாக கூறப்படுகிறது. எழுத்தாளர் டீன் கூண்ட்ஸ் என்பவர் எழுதியுள்ள இந்த நாவலில், சீனாவின் ராணுவ பரிசோதனை மையத்தில் இருந்து எதிர்பாராத வகையில் வெளியாகும் ஒரு வைரஸ் பற்றித்தான் அந்த நாவலின் 39வது அத்தியாத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பையோ வெப்பன் தயாரிக்கும் இடமாக சீனாவின் உஹான் நகரம் அறியப்படுகிறது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஞானிகளும் கொரோனா வைரஸ் சீனாவின் பையோ ஆய்வு கூட்டத்தில் இருந்துதான் உருவாகியிருக்க வேண்டும் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் டீன் கூண்ட்ஸ் எழுதியுள்ள அந்த நாவலிலும், இந்த கொடிய வைரசுக்கு உஹான்-400 என்று பெயரிடப்பட்டதாகவும், அந்த வைரஸ் சீனாவின் உஹான் நகரில் இருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸாக இருக்கும் எனவும், உலகில் வேறு எந்த உயிரினமும் இந்த வைரஸை கொண்டிருக்காது எனவும் அந்த நாவலில் எழுதப்பட்டுள்ளது.

1981ம் ஆண்டே கொரோனா வைரஸ் குறித்து ஆசிரியர் ஒருவர் புத்தகத்தில் எழுதியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Corono virus
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story