×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெறும் 1 ரூபாய்க்கு ஆடை... கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்து கடையை திறக்கவே பயந்த ஊழியர்கள்! அதிர்ச்சி வீடியோ...!!!

மும்பை மலாட் வெஸ்டில் 1 ரூபாய்க்கு ஆடை வழங்கும் சலுகையால் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி ஆஃபர் ரத்து செய்யப்பட்டதாக NEWME நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

மும்பை மலாட் வெஸ்டில் உள்ள இன்ஃபினிட்டி மால் வளாகத்தில் செயல்படும் NEWME ஃபேஷன் ஷோரூம், 1 ரூபாய்க்கு ஆடை வழங்கும் சிறப்பு சலுகையை அறிவித்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். கூட்ட நெரிசல் கட்டுக்கடங்கியதால் போலீஸார் தலையிட்டு நிலைமையை சீர்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சமூக வலைத்தள ரீலால் குவிந்த கூட்டம்

முதலில் வரும் 100 முதல் 125 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு ஆடை வெறும் 1 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று நிறுவனம் சமூக வலைத்தள ரீல் மூலம் விளம்பரம் செய்திருந்தது. அந்த வீடியோ வேகமாக பரவியதால், அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் ஷோரூம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் முண்டியடிக்கத் தொடங்கினர்.

கடை திறக்க அஞ்சிய ஊழியர்கள்

கூட்டத்தின் அழுத்தம் அதிகரித்ததால், ஷட்டரைத் திறந்தால் மக்கள் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் ஊழியர்கள் கடையைத் திறக்க தயங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையும் படிங்க: அடிஆத்தீ... மருத்துவமனை ICU ஜன்னல் கம்பிகளில் 10 அடி நீளம்முள்ள நாகப்பாம்பு! அலறி ஓடிய மக்கள்..... உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு நேர்ந்த கதி என்ன?.. வைரல் வீடியோ..!!!

ஆஃபர் ரத்து... கிளைகளிலும் வாபஸ்

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். பின்னர் பாதுகாப்பு காரணங்களால் அன்றைய 1 ரூபாய் சலுகை ரத்து செய்யப்படுவதாகவும், கடை மூடப்படுவதாகவும் ஷோரூம் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து கூட்டம் படிப்படியாக கலைந்தது. தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மும்பை மற்றும் புனேயில் உள்ள தங்களது கிளைகளிலும் இந்த 1 ரூபாய் ஆஃபர் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக NEWME நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: நிமிஷத்துல இப்படியா நடக்கணும்! கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பறந்து போன பைக்குகள்! திக் திக் விபத்து வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NEWME #மும்பை #1 Rupee Offer #Infinity Mall #Fashion Store
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story