×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவால் மக்கள் வாடும் சூழலில் எனக்கு ஏன் திருமணம்? - திருமண தேதியை தள்ளிவைத்த நியூசிலாந்து பிரதமர்.!

கொரோனாவால் மக்கள் வாடும் சூழலில் எனக்கு ஏன் திருமணம்? - திருமண தேதியை தள்ளிவைத்த நியூசிலாந்து பிரதமர்.!

Advertisement

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சிறப்பான பணிகளை மேற்கொண்ட தலைவர் என்ற பெருமையை தக்க வைத்தவர் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். நியூசிலானது நாட்டில் தற்போது வரை 15,550 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகி, 52 பேர் மட்டுமே பலியாகி இருக்கின்றனர். 

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தாவுக்கும் - அவரின் நண்பர் கிளார்க் கோபோர்ட்டுக்கும் திருமணம் செய்ய, கடந்த 2 வருடத்திற்கு முன்னர் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இதனால் அந்நாட்டு மக்கள் பிரதமரின் திருமண விழாவுக்காக காத்திருந்தனர். 

ஆனால், கொரோனாவை தொடர்ந்து ஒமிக்ரான் வகை வைரஸ் நியூசிலாந்தில் பரவ தொடங்கி இருப்பதால், தினசரி பாதிப்புகள் 70 ஐ கடந்துள்ளன. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது திருமணத்தின் தேதியை மாற்றி வைக்கப்போவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், எனது திருமணம் தற்போது நடக்கப்போவதில்லை. இதுவே எனது வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது நடக்கும் என கூற இயலாது. கொரோனாவால் வாடும் பொதுமக்களுக்கும், எனக்கும் வித்தியாசம் இல்லை. பலரும் கொரோனாவால் வீட்டிலேயே இருக்கின்றனர். மக்கள் தங்கள் விரும்பும் நபர்களுடன் இருக்க வாய்ப்பு இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு அன்பு செலுத்த வேண்டும். இயல்பு நிலைக்கு நாம் திரும்ப வேண்டும். அதன் பின்னரே எனது திருமணம் குறித்து அறிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#new zealand #Prime minister #Jacinda Ardern #Postpend #marriage #corona
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story