×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேரலையில் செய்தி வாசித்தபோது விழுந்த பல்..! சாமர்த்தியமாக சமாளித்த பெண் செய்தி வாசிப்பாளர்..! வைரல் வீடியோ.!

New reader teeth fall down while reading news on live

Advertisement

தொலைக்காட்சியில் நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தபோது பெண் செய்தி வாசிப்பாளரின் பல் உடைந்து விழுந்த நிலையில், அதை சாமர்த்தியமாக சமாளித்து தொடர்ந்து அவர் செய்தி வாசித்த வீடியோ ஒன்று தற்போது வைராலகிவருகிறது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் செய்திவாசிப்பாளரான மார்ச்கா படால்கோ என்ற பெண் அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது பல் ஒன்று உடைந்து கீழே விழப்போவதை உணர்ந்த அவர் சாமர்த்தியமாக தனது கைகளை கொண்டு உடைந்த பல்லை வெளியே எடுத்துவிட்டு தொடர்ந்து செய்திவாசிக தொடங்கியுள்ளார்.

அதேபோல் அவரது பல் உடைந்ததுகேமிராவில் நன்கு தெரிந்தாலும், பல் உடைந்தது தெரியாத அளவிற்கு அதனை சமாளித்து செய்தி வாசித்தார் மார்ச்கா படால்கோ. நேரலையில் பாத்துக்கொண்டிருந்த பலருக்கும் என்ன நடந்தது என்று கூட தெரியாத அளவிற்க்கு மிக அற்புதமாக அந்த சூழலை கையாண்ட அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள மார்ச்கா படால்கோ, 10 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் இரும்பு கடிகாரத்தால் தாக்கியபோது அந்த பல் பாதிக்கப்பட்டதாகவும், இது மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இதோ அந்த காட்சி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysterious #viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story