×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

16 இந்திய மருந்து நிறுவனங்களுக்கு தடை... நேபாள அரசு அதிரடி உத்தரவு.!

16 இந்திய மருந்து நிறுவனங்களுக்கு தடை... நேபாள அரசு அதிரடி உத்தரவு.!

Advertisement

 

இந்தியா பலதுறைகளில் தொடர்ந்து சாதனைகளை செய்து வருகிறது. இவற்றில் மருத்துவ துறையும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் அடங்கும். இந்திய அளவில் கொரோனா தடுப்பூசிகளை மும்பையில் உள்ள சீரம் நிறுவனமும், ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனங்களும் அடங்கும். 

மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு என உலக சுகாதார அமைப்பு பல்வேறு தரக்கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்துள்ளது. அவற்றின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, மருந்து நிறுவனங்களால் தங்களின் தயாரிப்பை உலகளவில் எடுத்து சென்று சந்தைப்படுத்தவோ, பரிசோதனை செய்யவோ இயலும். 

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் சிலவற்றை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தரக்கட்டுப்பாடு குறைவு காரணமாக மூடி இருக்கிறது. இதனை மத்திய அரசும் செய்திருக்கிறது. 

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி நடைமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வாத மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் மருந்துகள் தடை செய்யப்படுவதாக நேபாள நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 

அதுகுறித்த அறிவிப்பில், இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்களை வைத்து உலக சுகாதார அமைப்பின் நடைமுறைக்கு ஒத்துழைக்காத பாபா ராமதேவ் மருந்து நிறுவனம் திவ்யா பார்மசி, Deant Parenterals, Mercury Laboratories, Alliance Biotech, Captab, Aglomet, Zee Laboratories, Daffodils, Yelijual, Dial, Anand Life Science நிறுவனத்தின் மருந்துகள் தங்கள் நாட்டிற்குள் விற்பனைக்கு தடை விதித்து கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nepal #Nepal Govt #India #Indian Medicine
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story