தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹவாய் அருகே அதிர்ச்சி.! 9 வீரர்களுடன் கடலில் பாய்ந்த ராணுவ விமானம்.! நடந்தது என்ன??

ஹவாய் அருகே அதிர்ச்சி.! 9 வீரர்களுடன் கடலில் பாய்ந்த ராணுவ விமானம்.! நடந்தது என்ன??

navy-plane-overshoot-run-into-the-sea-in-hawai Advertisement

அமெரிக்கா ஹவாய் மாநிலம், ஓஹு தீவின் கெனோஹே கடற்கரை பகுதியில் ராணுவ படைப்பு சொந்தமான விமான தளம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒன்பது ராணுவ வீரர்களுடன் போயிங் போஸிடான் 8-ஏ ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று  தரையிறங்கியுள்ளது.

அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை தாண்டி வேகமாகச் சென்று கடல்நீரில் இறங்கியது. தகவலறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் 9 வீரர்களும் கடலில் நீந்தி பாதுகாப்பாக கரைக்கு திரும்பினர். அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Hawai

மழை மற்றும் மேகங்கள் சூழ்ந்து கடும் பனிமூட்டமாக இருந்ததால் விமானிக்கு ஓடுபாதை சரியாக தெரியவில்லை எனவும், அதனால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hawai #Navy plane #sea
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story