இப்போ சமைக்க டைம் இல்ல... டான்ஸ் கிளாஸ் போகணும்! மனைவி சொன்ன அந்த வார்த்தை.... குழந்தைகள் கண் எதிரே கணவன் செய்த வெறிச்செயல்! நாக்பூரில் நடந்த கொடூரம்....!!!
மகாராஷ்டிரா நாக்பூரில் சமையல் செய்ய மறுத்த மனைவியை கணவர் சரமாரியாக தாக்கியதில், கழுத்து எலும்பு முறிந்து குடல் சேதமடைந்து உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சமையல் செய்ய மறுத்த மனைவியை கணவர் சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மதுபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணா லால் (41), உணவு தயாரிக்காததால் ஆத்திரமடைந்து மனைவி யாமினி (38) மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இரண்டு குழந்தைகள் முன்னிலையில் நடந்த தாக்குதலில் படுகாயமடைந்த யாமினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டான்ஸ் வகுப்புக்கு தயாரான மனைவி மீது தாக்குதல்
தகவலின்படி, சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணா உணவு கேட்டுள்ளார். அப்போது டான்ஸ் கிளாஸுக்குச் செல்ல யாமினி தயாராகிக் கொண்டிருந்ததால், சமையல் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, மனைவியின் கழுத்து மற்றும் அடிவயிற்றில் சரமாரியாக தாக்கியுள்ளார். இரண்டு குழந்தைகள் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வகுப்பறைக்கு 10 நிமிடம் லேட்டாக போன 8 வயது சிறுமி! ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனையால் நடந்த அதிர்ச்சி..... பதைபதைக்கும் காட்சி!!!
வலி அதிகரித்தும் மருந்து வாங்கித் தரவில்லை
தாக்குதலுக்குப் பிறகு கடுமையான வலியால் துடித்த யாமினி, தனக்கு மருந்து வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் வெளியே சென்ற கிருஷ்ணா, மருந்து எதுவும் வாங்காமல் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் யாமினியின் அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது.
பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
இதையடுத்து யாமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், யாமினியின் கழுத்து எலும்பு முறிந்திருந்ததும், அடிவயிற்றில் குடல் கடுமையாக சேதமடைந்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணா லாலிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாக்பூரில் நடந்த மனைவி கொலை தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப வன்முறையால் Nagpur Crime வழக்காகவும் இது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: Zipline சவாரி : இளைஞரின் சட்டையை பிடித்து இளம்பெண் செய்த காரியம்.. துடிதுடித்து உயிரிழநத 24 வயது இளைஞர்..!