×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே! 18 மாதக் குழந்தையை 6-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்! பின்னணியில் 10 வயது சிறுமி... அதிரவைக்கும் காரணம்? கொடூர சம்பவம்..!!!

மும்பை கோரேகானில் 18 மாதக் குழந்தை கட்டடத்தின் 6-வது மாடியிலிருந்து கீழே வீசப்பட்டு உயிரிழந்தது. சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் 10 வயது சிறுமி, அவரது தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மும்பையின் கோரேகான் கிழக்குப் பகுதியில் 18 மாதக் குழந்தை கட்டடத்தின் 6-வது மாடியிலிருந்து கீழே வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி இரவு குழந்தை காணாமல் போன நிலையில், கட்டடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக 10 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளில் பதிவான அதிர்ச்சி சம்பவம்

கோரேகானில் உள்ள ஷிவ்ஷாஹி கட்டடம் எண் 1-ன் 6-வது மாடியில், அக்டோபர் 14ஆம் தேதி இரவு 9 மணியளவில் 18 மாதக் குழந்தை திடீரென காணாமல் போனது. குடும்பத்தினர் குழந்தையைத் தேடிய நிலையில், கட்டடத்தின் திறந்தவெளி குழாய் செல்லும் பகுதியில் இருந்து குழந்தை கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: திறந்த குழாய்யில் சடலமாக மீட்கப்பட்ட ஒன்றைரை வயது குழந்தை! 10 வயது சிறுமி செய்த பகீர் காரியம்... அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த பயங்கரம்..!!!

தொடக்கத்தில் குழந்தை எப்படி கீழே விழுந்தது என்பது தெளிவாகவில்லை. இதையடுத்து, கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அண்டை வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமி குழந்தையைத் தூக்கிச் சென்று 6-வது மாடியில் உள்ள திறந்தவெளிப் பகுதியிலிருந்து கீழே வீசியதாகப் பதிவாகியிருந்தது.

பூனை தொடர்பான தகராறு காரணமா?

குழந்தையின் குடும்பத்தினர் அக்டோபர் 1ஆம் தேதிதான் அந்தக் கட்டடத்துக்குக் குடிவந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பூனை தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்துக்கும் குழந்தையின் உயிரிழப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுமி, தாயாரிடம் போலீசார் விசாரணை

சம்பவம் தொடர்பாக திண்டோஷி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு மனவளர்ச்சிப் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சம்பவத்தின் பின்னணி மற்றும் வேறு யாரேனும் அவரைத் தூண்டினார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. சிறுமி மற்றும் அவரது தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. விசாரணையின் முடிவில்தான் சம்பவத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும்.

 

இதையும் படிங்க: திறந்த குழாய்யில் சடலமாக மீட்கப்பட்ட ஒன்றைரை வயது குழந்தை! 10 வயது சிறுமி செய்த பகீர் காரியம்... அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த பயங்கரம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மும்பை குழந்தை உயிரிழப்பு #கோரேகான் சம்பவம் #Mumbai Toddler Death #CCTV Footage #திண்டோஷி காவல்துறை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story