தப்பு செஞ்சது ஒருவர் தண்டனை இவுங்களுக்கா கடவுளே! அதிவேகமாக வந்த காரால் அடுத்தடுத்து மோதிய பைக்! மனைவியின் கண்ணெதிரே துடிதுடித்து இறந்த கணவர்.. 2 பேர் படுகாயம்! ஷாக் வீடியோ...!!!
மும்பை கர் பகுதியில் அதிவேக கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 41 வயது அய்யப்பன் செல்வராஜ் உயிரிழந்தார். அவரது மனைவி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
மும்பை கர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 41 வயதான அய்யப்பன் செல்வராஜ் ஹரிஜன் உயிரிழந்தார். சி.டி. ரோடு சந்திப்பில் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் அவரது மனைவி உள்ளிட்ட இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னால் வந்த கார் மோதி விபரீதம்
அய்யப்பன் செல்வராஜ் தனது மனைவி நான்சி (37) உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர்களது வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் அய்யப்பன் செல்வராஜ் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
இதையும் படிங்க: உடம்பெல்லாம் சிலிர்க்குது..! கிங் கோப்ராவுக்கு முன் தலைகீழாக படுத்து... லிப் லாக் கிஸ் வேற..! திகில் காட்சியை பாருங்க..!!!
மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் உயிரை காப்பாற்ற முடியவில்லை
விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அய்யப்பன் செல்வராஜை மீட்டு பாபா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், காயங்களின் தீவிரம் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
71 வயது கார் ஓட்டுநர் கைது
விபத்தில் அய்யப்பனின் மனைவி நான்சி மற்றும் மற்றொரு ஸ்கூட்டர் ஓட்டுநர் பலத்த காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 71 வயது கார் ஓட்டுநர் சுதிர் சீதாராம் சாவந்தை கர் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.