Video : சரியாக மூடப்படாத காரின் கதவு! அடுத்தடுத்து சரமாறியாக கீழே விழுந்த தாய்-மகள்! அடுத்த நொடியே நடந்த திக் திக் காட்சி....
கேரளாவின் மலப்புரத்தில் கார் கதவு சரியாக மூடப்படாததால் தாய் மகள் தவறி விழுந்த சம்பவம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது

கார் கதவு சரியாக மூடப்படவில்லை வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தாய் மகள்
கார் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிகழ்ந்துள்ளது. ஒரு காரில் பயணம் செய்துகொண்டும் அதே சமயம் அதன் கதவு முறையாக பூட்டப்படாமல் இருந்ததால், அதில் பயணித்த ஒரு தாய் மற்றும் அவரது மகள் எதிர்பாராதவிதமாக தாறுமாறாக காரில் இருந்து கீழே விழுந்தனர்.
இதைக் கண்ட பின்னால் வந்த கார் ஓட்டுநர் சற்றும் தயங்காமல் வாகனத்தை உடனே நிறுத்தியதால், பெரிய விபத்து ஒன்றை தவிர்க்க முடிந்தது. முதலில் விழுந்த மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடீரென மரத்திலிருந்து கசிந்த அதிசய நீர்! மக்கள் மஞ்சள், குங்குமம் பூசி தெய்வீக வழிபாடு! இறுதியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க...
நெட்டிசன்கள் தரும் விழிப்புணர்வு
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “வாகனத்தை இயக்கும் முன் ஒவ்வொரு பயணிக்கும் சீட் பெல்ட் அணிந்துள்ளார்களா? கதவுகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதா?” என்பதை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது போன்ற துயர சம்பவங்களைத் தவிர்க்க ஒவ்வொரு வாகன ஓட்டுநரும் அதிக கவனம் மற்றும் பொறுப்பு காட்ட வேண்டும்.
பாதுகாப்பே முக்கியம்
சிறிய தவறுகள் கூட பெரிய விபத்துகளை ஏற்படுத்தலாம் என்பதற்கான நினைவூட்டலாக இந்த சம்பவம் விளங்குகிறது. இதனை மற்றவர்கள் பாடமாக எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தில் இது போன்ற அதிர்ச்சி நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: Video: புயலில் சிக்கிய விமானம்! பயணிகளின் அலறல் சத்தம்! அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி....