×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நொடியில் உயிருக்கே உலை வைக்கும் கொடிய விஷம் கொண்ட பாம்புகள்! நூறு பேரை கொல்லுமாம்...

உலகின் மிக ஆபத்தான பாம்புகள் பற்றி அறிந்துகொள்வோம். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பாம்பு கடியால் உயிரிழக்கின்றனர் என்பதையும் தரவுகள் கூறுகின்றன.

Advertisement

பாம்புகளை பார்க்கும் பொழுது ஏற்படும் பயம் இயல்பானது. ஆனால் சில ஆபத்தான பாம்புகள் மனித உயிரையே உடனடியாக பறிக்கும் சக்தி கொண்டவை. உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் உலக சுகாதார நிறுவனம் கூறுவதப்படி 60,000க்கும் மேற்பட்டோர் பாம்பு கடியால் இறப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

சுருட்டை விரியன்

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் காணப்படும் இந்த பாம்பு, அதிகமான உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளில் வாழ்வதால், இது மனிதர்களுக்கு மிக ஆபத்தானதாகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழக்கின்றனர்.

இன்லேண்ட் டைபன்

உலகின் மிக விஷமுள்ள பாம்பு என்று அழைக்கப்படுவது இன்லேண்ட் டைபன். ஆஸ்திரேலியா மற்றும் மத்திய ஆசியாவில் வாழும் இந்த பாம்பு, நூறு மனிதர்களைக் கொல்லும் அளவிற்கு விஷ சக்தி கொண்டது. ஆனால் மனிதர்கள் வாழும் இடங்களில் இருந்து விலகியிருப்பதால் தாக்குதல்கள் அரிதாகவே நிகழ்கின்றன.

இதையும் படிங்க: நாகப்பாம்பு கடிச்சா உடனே இதையெல்லாம் பண்ணிடனுமாம்! இல்லையெனில் மரணம் நிச்சயம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...

கருப்பு மாம்பா

சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் வாழும் கருப்பு மாம்பா மிகவும் ஆக்ரோஷமான பாம்பு. ஆபத்தை உணர்ந்ததும் மின்னல் வேகத்தில் தாக்கும். உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கடித்த அரை மணி நேரத்திற்குள் உயிரிழப்பு ஏற்படும். இதன் விஷ சக்தி விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் மிக கொடியதாகும்.

கண்ணாடி விரியன்

இந்தியாவில் பிக் ஃபோர் எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்றான கண்ணாடி விரியன் மிக ஆபத்தானது. இந்தியாவில் 43% உயிரிழப்புகளுக்கும் இது காரணம். மிக வேகமாகவும் ஆக்கிரமிப்பாகவும் தாக்கும் தன்மை கொண்டது.

கட்டு விரியன்

பிக் ஃபோர் பாம்புகளில் ஒன்றான கட்டு விரியன் கடித்தால், இறப்பதற்கு 80% வாய்ப்பு உள்ளது. இதன் நியூரோடாக்சின் காரணமாக உடலில் தசை முடக்கம், சுவாச கோளாறு ஏற்பட்டு மரணத்தை தந்துவிடும்.

உலகின் ஆபத்தான பாம்புகள் குறித்து அறிந்திருப்பது நம்மை பாதுகாப்பதோடு, பாம்பு கடி ஏற்படும் சூழலில் உடனடி மருத்துவ உதவியை பெற வேண்டிய அவசியத்தையும் நினைவூட்டுகிறது.

 

இதையும் படிங்க: ராஜநாகம் Vs கண்ணாடி விரியன்! இரண்டில் எது அதிகம் விஷம் கொண்ட பாம்பு! கடித்ததும் உடனே என்ன செய்ய வேண்டும்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஆபத்தான பாம்புகள் #Snake bite #விஷப்பாம்பு #Black Mamba #India Snake Deaths
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story