×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி.! 13 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விமானம் மலைக்குகைக்குள் கண்டுப்பிடிப்பு..! ஆனால் உடைமைகள் இருக்கு...உள்ளே இருந்த 212 பயணிகள் எங்கே? மீண்டும் நீடிக்கும் மர்மம்..!!!

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் மாயமான பயணிகள் விமானம் குகைக்குள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல், 212 பேர் குறித்த மர்மத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், 13 ஆண்டுகளுக்கு முன்பு 212 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் மாயமான பயணிகள் விமானம், ஓசர்க் மலைத்தொடரின் குகைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சன் நகருக்கு அருகே ஆய்வு மேற்கொண்ட குழுவினர், குகைக்குள் விமானத்தின் வால் பகுதி இருப்பதைக் கண்டதாகவும், உள்ளே சென்றபோது முழு விமானமும் அங்கு இருந்துள்ளது. ஆனால், விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் அங்கு இல்லை என்பதால் மர்மம் நீடிக்கிறது.

குகைக்குள் முழுமையாக இருந்த பயணிகள் விமானம்

மிசோரி மாகாணத்தின் ஓசர்க் மலைத்தொடரில் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாத குகைப் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, இருளுக்குள் விமானத்தின் வால் பகுதி தென்பட்டதால், தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பெரிய பயணிகள் விமானம் குகையின் பாறைத் தளத்தில் இருந்துள்ளது.

இதையும் படிங்க: கல்லூரிக்கு போவதாக சொல்லி ஓயா விடுதிக்கு போன 19 வயது மாணவி! சிறிது நேரத்திற்கு பிறகு அறையிலிருந்து தனியாக வெளியேறிய காதலன்! கதவைத் திறந்து பார்த்த ஊழியர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. கதறி அழும் தந்தை..!!!

கடந்த 2013-ம் ஆண்டு 212 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் மாயமான விமானம், பல ஆண்டுகளாகத் தேடப்பட்ட நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

உடைமைகள் இருந்தன.. பயணிகள் மட்டும் இல்லை!

விமானத்தை ஆய்வு செய்தபோது, பயணிகளின் உடைமைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் அப்படியே இருந்ததாகவும், இருக்கைகளும் பெரிய சேதமின்றி காணப்பட்டுள்ளது.ஆனால், விமானத்தில் இருந்த 212 பேரில் ஒருவர்கூட அங்கு இல்லை என்பது ஆய்வாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குகையின் அறியப்பட்ட நுழைவாயில்கள் அனைத்தும் பெரிய பயணிகள் விமானம் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு சிறியதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியிருக்க, விமானம் எவ்வாறு குகைக்குள் சென்றது என்பதற்கான விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை.

212 பேர் எங்கே? தொடரும் விசாரணை

விமானம் குகைக்குள் எப்படி வந்தது, அதில் பயணித்தவர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துள்ளன. இதையடுத்து, ஓசர்க் மலைத்தொடருக்கு அடியில் உள்ள ஆழமான சுரங்கப்பாதைகள் மற்றும் சுற்றியுள்ள குகை அமைப்புகளில் கூடுதல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

13 ஆண்டுகளாக தங்களது குடும்பத்தினரின் நிலை குறித்து அறியாமல் காத்திருக்கும் 212 பேரின் உறவினர்களுக்கு விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பயணிகள் எங்கே சென்றார்கள் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது.

 

இதையும் படிங்க: ஐயோ.. நீங்க வேகமா ஓட்டுனதுக்கு அவுங்களுக்கு சாவா ..? 13 வயது சிறுவர்கள் ஓட்டிய கார்..! பரிதாபமாக பறிபோன ஏழைத் தொழிலாளியின் உயிர்..! 25 கொடுத்து சமரசம் செய்ய முயற்சி..? குலை நடுங்க வைக்கும் காட்சி!!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மாயமான விமானம் #Ozark Mountains #Missouri Plane Mystery #212 பயணிகள் #விமான மர்மம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story