×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அளவுக்கு மீறிய உணவால் 7 வயதில் 117 கிலோ உடல் எடையை எட்டிய சிறுவன்! படுக்கையை விட்டு நகர கூட முடியல.... இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் கம்பி எண்ணும் பெற்றோர்...கொடூர பின்னணி..!!!

அமெரிக்காவின் மிச்சிகனில் 7 வயது சிறுவன் 117 கிலோ எடையை எட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் மீது குழந்தை வன்கொடுமை மற்றும் இரண்டாம் நிலை கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் 117 கிலோ உடல் எடையை எட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு தேவையான மருத்துவ பராமரிப்பும், சத்தான உணவும் வழங்கப்படாததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அளவுக்கு மீறிய உணவு... மோசமான உடல்நிலை

தகவலின்படி, பேசும் திறன் இல்லாத அந்தச் சிறுவனுக்கு சரியான உணவுமுறை பின்பற்றப்படவில்லை. அதற்கு பதிலாக, தொடர்ந்து அதிகளவில் உணவு வழங்கப்பட்டதால் அவரது உடல் எடை 117 கிலோவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அவர் படுக்கையிலேயே நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மனைவி சில ஆண்டுக்கு முன்பு இறந்துட்டாங்க! உடல்நிலை சரியில்லை.... தாங்க முடியல! திடீரென EX. டிஎஸ்பி வீட்டில் கேட்டால் பயங்கர சத்தம்! அடுத்து பெரும் அதிர்ச்சி..!

மாரடைப்பால் உயிரிழப்பு

உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகளைத் தொடர்ந்து, சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை பெற்றோர் வழங்காததும் விசாரணையில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

பெற்றோர் கைது; கடுமையான வழக்குப்பதிவு

சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையை வன்கொடுமைக்கு உள்ளாக்குதல், சித்திரவதை செய்தல் மற்றும் இரண்டாம் நிலை கொலை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Michigan #Child Neglect #117 kg Boy #அமெரிக்கா #Parents Arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story