×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமாகி மூன்றே நாளில் தனது கணவனை இழந்த 22 வயது இளம்பெண் - காரணம் என்ன தெரியுமா?

marriage

Advertisement

கன்சாஸ் நகரை சேர்ந்த இளம் ஜோடியினர் ஹேட்ரிக் மற்றும் காட்ரல்.22 வயதான இருவருக்கும் திருமணமாகி மூன்றாவது நாளில் ஹனிமூனுக்காக  ஃப்ளோரிடா சென்றுள்ளனர்.

புளோரிடா கடற்கரையில் இருவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பெரு அலை ஒன்று வந்துள்ளது. இதில் இருவரும் கடலில் இழுத்து செல்லப்பட்டனர்.

இதில் கணவரான காட்ரலுக்கு தண்ணீரில் இறங்கி பழக்கம் இல்லாத காரணத்தால் அவரால் நீச்சல் அடிக்க முடியவில்லை.தண்ணீரில் மூழ்கிய சில மணித்துளிகளிலேயே  மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.

ஆனால் மனைவி தொடர்ந்து அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.இதற்கிடையில் உதவிக்கு வந்த உதவிக்குழு இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்தது. ஆனால் கணவரை காப்பாற்ற முடியவில்லை.

திருமணமாகி மூன்று  நாளில் அந்த இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகத்தை நினைத்து குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#follorida #marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story