×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏழாவது மாடியில் இருந்து தனது மனைவியை கீழே தூக்கி வீசிய கணவர்.! அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா.?

Man through his wife from 7th floor

Advertisement

தாய்லாந்து நாட்டில் நபர் ஒருவர் மனஅழுத்தம் காரணமாக தனது மனைவியை 7 வது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா நாட்டை சேர்ந்த  45 வயதான டேவ் மிட்செல் என்பவர் தனது மனைவி சுகந்தா என்பவருடன் தாய்லாந்திற்கு வந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அவரால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. இதனால் டேவ் மிட்செல் கடும் மனஅழுத்ததில் இருந்ததாக தெரிகிறது.

இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் டேவ் மிட்செல் தனது மனைவி சுகந்தாவையே ஏழாவது மாடியில் இருந்து தூக்கி கீழே வீசியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் சுகந்தாவுக்கு முதலுதவி அளித்து, பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

7 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சுகந்தா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். எனினும் அவருக்கு இடுப்பு உடைந்துள்ளது, மேலும் கை ஒன்றும் காயமடைந்துள்ளது. இதனை அடுத்து இரண்டு மணிநேரம் போராடி போலீசார் டேவ் மிட்செல்லை கைது செய்துள்ளன்னர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story