×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

100 அடி உயரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிய 3 வயது குழந்தை.! காப்பாற்றியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.!

100 அடி உயரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிய 3 வயது குழந்தையைக் காப்பாற்றியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.!

Advertisement

கஜகஸ்தான் தலைநகர் நுர்-சுல்தான் பகுதியை சேர்ந்த நபர் தனது உயிரை பணயம் வைத்து மூன்று வயது சிறுமியை காப்பாற்றிய சம்பவம் பலரையும் வியக்கவைத்துள்ளது.

அப்பகுதியில் மூன்று வயது குழந்தையின் தாய் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டில் விளையாடி கொண்டு இருந்த மூன்று வயது சிறுமி குஷன்கள் மற்றும் விளையாட்டு பொம்மைகளை ஜன்னல் வெளியே தூக்கி எறிந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென ஜன்னலுக்கு வெளியே வந்த குழந்தை, விரல் நுனியில் பிடித்துக் கொண்டு 100 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது. அப்போது சபிட் என்பவர் கீழே கூட்டம் ஒன்று கூடி மேலே தம் வீட்டை நோக்கி பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போதுதான் அந்தச் சிறுமி தமது வீட்டிற்கு மேலே உள்ள வீட்டுச் சன்னலிலிருந்து தொங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தார்.

 

இதனையடுத்து உடனடியாக அவர் வீட்டின் சன்னலில் ஏறி மேலே தொங்கிக்  கொண்டிருந்த சிறுமியின் கால்களைப் பிடித்து இழுக்க ஒரு கணம் அவள் சன்னலிலிருந்து கைகளை எடுத்து விழுகிறாள். அவளை லாவகமாகப் பிடித்து தம் வீட்டுக்குள் இருப்பவரிடம் கொடுத்து பின்பு தாமும் பாதுகாப்பாக உள்ளே செல்கிறார் சபிட். இந்தநிலையில் கஜகஸ்தான் ராணுவம் சபிட்டை ஒரு 'ஹீரோ' என வர்ணித்து தன் உயிரைப் பணயம் வைத்து இரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காக அவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#3 years chil #man #saved #award
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story