×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தவறுதலாக கைபட்டு மனைவியிடம் இருந்து கணவனுக்கு சென்ற போன் கால்.. மனைவி பேசியதை கேட்டு உயிரைவிட்ட கணவன்

விவாகரத்து பெற்றநிலையில் மனைவி தவறுதலாக முன்னாள் கணவருக்கு போன் செய்த சம்பவம் அவரது உயிரையே பறித்துள்ளது.

Advertisement

விவாகரத்து பெற்றநிலையில் மனைவி தவறுதலாக முன்னாள் கணவருக்கு போன் செய்த சம்பவம் அவரது உயிரையே பறித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் Gareth rees. இவரது மனைவி claire. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். ஆனாலும் கணவருக்கு தனது மனைவியை பிரிந்தது மிகவும் கஷ்டமாக இருந்துள்ளது. இதனால் தனது மனைவியின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் claire தனது புது காதலருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது Gareth rees அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்த claire தனது முன்னாள் கணவரின் அந்த குறுஞ்செய்திக்கு பதிலளிக்க முயான்றுள்ளார். அப்போது அவருக்கே தெரியாமல் தவறுதலாக பழைய கணவருக்கு போன் அழைப்பு சென்றுள்ளது.

இதனை கவனிக்காத claire தனது புது காதலனுடன் தனது பாலியல் உறவு குறித்து பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனை எதிர்முனையில் கேட்டுக்கொண்டிருந்த claire யின் பழைய கணவன் அவர்கள் பேசுவதை கேட்டு மனம் உடைந்துவிட்டார்.

இறுதியில் ஐயோ நான் அந்த குறுஞ்செய்திக்கு பதில் அளிக்கவில்லையே என போனை பார்த்த claire தனது முன்னாள் கணவருக்கு போன் அழைப்பு சென்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியும் மனஉளைச்சலுக்கு அடைந்துள்ளார். உடனே தனது முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவரது வீட்டுக்கு ஓடியுள்ளார்.

ஆனால் அவர் அங்கு இல்லை. அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் Garethயின் நண்பர் வெளியூருக்குச் சென்றிருப்பதால் அவரின் வீட்டைக் கவனித்துக் கொள்ள Gareth அங்குச் சென்றிருப்பதாக அந்த நபர் கூறியுள்ளார். அவர் கூறிய இடத்திற்கு claire சென்றுபார்த்தபோது காரெத் மது போதையில் நீச்சல் குளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தநிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கடுமையான மனஅழுத்ததால் இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்டு நொறுங்கிப்போன claire , தனது தவறான தொலைபேசி அழைப்பினால் Gareth இறந்துவிட்டார் என அழுது புலம்பியுள்ளார்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story