×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செல்போன், மின்சாரம் இல்லாமல் வாழும் 48 வயது நபர்.. அதற்கு பின்னால் உள்ள பகீர் காரணம்..

செல்போன் மற்றும் கரண்ட் இரண்டுமே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் பிரிட்டனைச் சேர்ந்த புருனோ ஃ பாரிக் என்ற நபர்.

Advertisement

செல்போன் மற்றும் கரண்ட் இரண்டுமே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் பிரிட்டனைச் சேர்ந்த புருனோ ஃ பாரிக் என்ற நபர்.

இன்றைய வாழ்க்கை முறையில் அனைத்து மனிதர்களின் கைகளிலும் மற்றொரு விரலாகவே மாறிவிட்டது செல்போன். குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை இன்று அனைவரும் பயன்படுத்தும் இந்த சாதம் நமக்கு பலவகைகளில் உதவியாக இருந்தாலும் அதன் மூலம் பல விளைவுகளும் ஏற்படத்தான் செய்கிறது.

அப்படி ஒரு விளைவினால் தவிப்பவர்தான் இந்த பிரிட்டனைச் சேர்ந்த புருனோ ஃ பாரிக். 48 வயதான புருனோவுக்கு மின்சாரம் மற்றும் மொபைல் என்றால் அலர்ஜி. காரணம் அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் அவரது உடலில் ஒருவித அலர்ஜி ஏற்படுகிறது. மருத்துவ துறையில் இந்த நோய்க்கு எலக்ட்ரோ மேக்னடிக் ஹைபர்சென்சிட்டிவிட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.

தற்போது வெறும் 31 கிலோ எடையுடன் வாழ்ந்து வரும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை மறவர்களை போல சாதாரணமாகத்தான் வாழந்து வந்துள்ளார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இவர் செல்போன், மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். செல்போன் போன்ற சாதனங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு யாரையும் பாதிக்காது என்று சொல்ல முடியாது. அதற்கு நான் ஒரு வாழும் உதாரணமாக இருப்பதாக புருனோ ஃ பாரிக் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral News #Mysterious news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story