×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உயிருடன் இருக்கும் எலி குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் சீன இளைஞர்! பல மில்லியன் பேர் பார்த்த வீடியோ..!

Man eat newborn mouse video goes viral

Advertisement

சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை 80 பேர் இந்த வைரஸ் தாக்குதலினால் உயிர் இழந்துள்ளதாகவும், 1000 பேருக்கு மேல் வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள சந்தை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பாம்பில் இருந்தே இந்த கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில்  அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை விலங்குகளை உணவுக்காக வாங்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என சீனா அரசு மக்களை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் உயிருடன் இருக்கும் எலி குட்டிகளை சாஸில் முக்கி உயிருடன் திங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

திரி ஸ்ஹூக்ஸ் (Three Squeaks) என்று இந்த உணவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.  உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில் முக்கி அப்படியே சாப்பிடும் பழக்கம் சீனர்களிடம் இருந்துள்ளது. இதனை திரி ஸ்ஹூக்ஸ் என உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். இந்த உணவு வகையானது சில வருடங்களுக்கு முன்னரே சீனாவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mystery #myths #Rat food
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story