16 அடி ராஜநாக பாம்புடன் விளையாட்டு..! இறுதியில் தலையை துண்டாக வெட்டி எடுத்த கொடூரம்..!
Man dies after being bitten by cobra he was teasing

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான். என்னதான் மக்கள் பாம்புக்கு பயந்தாலும், ஒருசிலர் பாம்பை பிடித்து முத்தம் கொடுப்பது, உடலில் சுற்றிக்கொள்வது, அதனுடன் விளையாடுவது என வேடிக்கை காண்பிப்பார்கள்.
இது பல நேரங்களில் விளையாட்டாக இருந்தாலும், சில நேரங்களில் விபரீதமாகிவிடுகிறது. அந்த வகையில் இந்தோனேஷியாவின் மேற்கே உள்ள Kalimantan என்னும் பகுதியை சேர்ந்த நொர்ஜனி என்பவர் விலங்குகளை வைத்து வித்தை காட்டும் மந்திரவாதி என்று அங்கிருக்கும் நபர்களால் அழைக்கப்படுகிறார்.
இவர், சமீபத்தில் 16 அடி நீளமுள்ள ராஜ நாக பாம்பு ஒன்றை பிடித்து அங்கிருக்கும் மக்களுக்கு வித்தை காட்டியுள்ளார். இதில் ராஜநாக பாம்பு அவரது கையில் பலமுறை கொத்தியுள்ளது. பாம்பு கொத்துவதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வித்தை காண்பித்த நிலையில் ஒருகட்டத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க, உடம்பு முழுவதும் விஷம் பரவி விட்டது இனி காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூற, சிறிது நேரத்தில் அவர் உயிர் இழந்துள்ளார். நொர்ஜனின் மரணத்திற்கு அந்த பாம்புதான் காரணம் என அந்த பாம்பின் தலையை துண்டாக வெட்டி தங்களது ஆத்திரத்தை தீர்த்துள்ளனனர் அந்த பகுதி மக்கள்.