×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாய் உணைவை சாப்பிடுவோருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி.! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

நாய் உணைவை சாப்பிடுவோருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி!..பிரப்ல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

Advertisement

லண்டன், இங்கிலாந்தில் உள்ள ஆம்னி என்ற நிறுவனம் நாய் உணவை ஐந்து நாட்கள் சாப்பிடும் நபருக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் ஆம்னி என்ற நிறுவனம் நாய்க்கு உற்பத்தி செய்யும் உணவை சுவைத்துப் பார்த்து அதுபற்றிய விபரங்களை தருவதற்கு சம்பளம் தருகிறது.

இந்நிறுவனம் தாவர வகையிலான நாய் உணவை தயாரித்து வருகிறது. இந்த உணவுப் பொருட்களில் இனிப்பு உருளைக்கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், ப்ளூபெர்ரி, கிரான்பெரி போன்ற கனிகளும் மற்றும் பட்டாணி பழுப்பு அரிசி போன்றவைகளும் கலந்து இருக்கும்.

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர் நாய்க்கு தயாரிக்கப்படும் உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என உறுதி செய்ய வேண்டும். ஒரு வேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அது பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். வேறு எந்த தனி தகுதியும் இந்த வேலைக்கு தேவை இல்லை.

இதன்படி ஐந்து நாட்களுக்கு நாய் உணவை சாப்பிடவேண்டும் சாப்பிட்ட பிறகு அவரது அனுபவம் உணவின் சுவை, மற்றும் சவாலை எதிர்கொள்ளும் போது ஏற்படும் ஆற்றல் அளவு, மனநிலை மற்றும் வயிற்றில் உணவின் இயக்கம் உள்ளிட்டவற்றை எப்படி உணர்ந்தார்கள் என்பது பற்றிய விவரங்களை நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவராக, 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஆம்னி நிறுவனத்தின் துணை நிறுவனரான ஷிவ் சிவகுமார் கூறும்போது, ஆம்னி பொருட்கள் தூய்மையானவை இரகசிய பொருள் எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சட்டப்படி அனைத்து நாய் உணவும் மனிதர்கள் உபயோகிக்கும் உணவுப் பொருட்களையே கொண்டிருக்க வேண்டும். ஆனால் சில தயாரிப்புகளில் விலங்குகளின் மலிவான உபயோகப்பொருட்கள் சேர்க்கப்படும். மனிதர்கள் சாப்பிட்டு மீதமுள்ள விரும்பத்தகாத உணவுகளும் சேர்க்கப்படுவது உண்டு. இதை மனிதருக்கு கொடுக்கும் போது நிச்சயம் அவர்கள் விரும்புவதில்லை.

ஆனால் ஆம்னி நாய்க்காக தயாரிக்கும் உணவு பொருட்கள் மனிதர்கள் கூட உண்பதற்கு ஏற்றவை. அதனாலேயே எங்களது தயாரிப்புகளை  சுவைத்து பார்ப்பதற்காகவும் அவை எவ்வளவு சுவை வாய்ந்தது, மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது என்றும் ,தாவரம் சார்ந்த உணவு என்று நிரூபிப்பதற்காக நாங்கள் அதற்கான ஆட்களை பணிக்கு அமர்த்துகிரோம்.

இந்த ஆம்னி தயாரிப்புகளை நான் மற்றும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் கூட உண்போம். ஆனால் பிற நாய் உணவு தயாரிப்பு நிர்வாகிகள் பலர் அதனை செய்ய முடியாது என நாங்கள் உறுதி கூறுகிறோம். என்று அந் நிறுவனத்தின் நிறுவனரான ஷிவ் சிவகுமார் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Food Allergy #Dog Food #World news #Top Tamil News
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story