மக்களே உஷார்! உங்க வீட்டு சிலிண்டரில் இந்த குறியீடுகள் இருக்கா..? உடனே செக் பண்ணுங்க! வீடியோவை மிஸ் பண்ணிட்டாத்தீங்க.....!!!
LPG சிலிண்டர் பாதுகாப்பு குறியீடுகள் என்ன? Expiry/Testing Date எப்படி அறியலாம்? A, B, C, D எழுத்துகளின் அர்த்தம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல்கள்.
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்வது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக முக்கியமான கடமையாகும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, சிலிண்டரின் மேல் பகுதியிலுள்ள குறியீடுகள் மூலம் அதன் சோதனை காலத்தை எளிதில் அறியலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் குறியீடுகளின் அர்த்தம் என்ன?
பொதுவாக LPG சிலிண்டர்களின் மேல் பகுதியில் A, B, C, D போன்ற ஆங்கில எழுத்துகளுடன் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குறியீடுகள் அந்த சிலிண்டரின் சிலிண்டர் பாதுகாப்பு சோதனை காலத்தை காட்டுகின்றன. ஆண்டின் நான்கு காலாண்டுகளை அடிப்படையாகக் கொண்டு இவை பிரிக்கப்படுகின்றன. ‘A’ என்பது ஜனவரி முதல் மார்ச் வரை, ‘B’ என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரை, ‘C’ என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரை, ‘D’ என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரை குறிக்கும்.
இதையும் படிங்க: உயிரை பணயம் வைத்து இது ரொம்ப முக்கியமா ? ரயில் பாலத்தின் விளிம்பில் தொங்கி இளையர் செய்யுற வேலையை பாருங்க! அதிர்ச்சி வீடியோ..!
எண்ணின் முக்கியத்துவம் என்ன?
எழுத்திற்கு பின்னர் வரும் எண், அந்தச் சிலிண்டர் எந்த ஆண்டுக்குள் மீண்டும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கிறது. உதாரணமாக ‘B-24’ என்று இருந்தால், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவதற்குள், அதாவது ஜூன் மாதத்திற்குள் அந்த சிலிண்டர் சோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும்.
காலாவதி சிலிண்டர் பயன்படுத்தினால் என்ன ஆபத்து?
குறிப்பிட்ட காலத்தை கடந்த சிலிண்டர்களில் துருப்பிடித்தல், கசிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இது தீ விபத்து போன்ற பெரிய ஆபத்துகளுக்குக் காரணமாகும். ஆகவே, புதிய சிலிண்டர் பெற்றுக் கொள்ளும் போது அதன் Expiry Date குறியீட்டை கவனமாக சரிபார்ப்பது அவசியம்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த விழிப்புணர்வு வீடியோ, பொதுமக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிலிண்டர் குறியீடுகளை அறிந்து செயல்படுவது மிகவும் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
இதையும் படிங்க: அடிஆத்தி.... ஆற்றில் அமைதியாக விளையாடிய குழந்தை! சில நொடிகளில் பொம்மை என நினைத்து உயிருள்ள முதலையை மேலே தூக்கி..... அதிர்ச்சி வீடியோ..!!