×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேண்டை கழட்டி இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர்! பெண்ணை தாகத இடத்தில் தொட்டு... சூப்பர்மார்கெட்டில் நபர் செய்த கேவலம்! சிசிடிவியில் சிக்கிய அந்த காட்சி..!!!

லாஸ் ஏஞ்சல்ஸ் ஹோல் ஃபுட்ஸ் கடையில் நடந்த பாலியல் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை தேடும் போலீஸ் தீவிர விசாரணை.

Advertisement

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்றுள்ள சமீபத்திய சம்பவம், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ள நிலையில், இந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோல் ஃபுட்ஸ் கடையில் அதிர்ச்சி சம்பவம்

கடந்த மார்ச் 23-ஆம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள வாலென்சியா பகுதியில் அமைந்துள்ள Whole Foods அங்காடியில் பெண் ஒருவர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு பாலியல் தாக்குதல் மேற்கொண்டார். அந்த நபர் திடீரென தனது உடைகளை களைந்து, விகாரமாக நடந்துகொண்டு, பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக தவறான முறையில் தொட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அத்துமீறிய காமவெறி! நடனப்பள்ளியில் இளம்பெண் அமர்ந்திருந்த இடத்தில் மர்ம நபர் செய்த கேவலம்..! அதிர்ச்சியில் பெற்றோர்..!!

சிசிடிவி வீடியோவில் பதிவான காட்சிகள்

இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோதிலும், குற்றவாளி அதற்குள் தப்பிச் சென்றுள்ளார்.

குற்றவாளியை தேடும் போலீஸ்

வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் தாடியுடன் டெனிம் சட்டை மற்றும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபரை கண்டுபிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொது இடத்தில் நடந்துள்ள இந்த துணிகர குற்றம் குறித்து கடுமையான பிரிவுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி குறித்த தகவல் உள்ளவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதையும் படிங்க: இது மெட்ரோவா? இல்ல கழிவறையா? கூச்சமே இல்லாமல் சிறுநீர் கழித்த நபர்! அதிகாரிகளின் நடவடிக்கை.... வைரல் வீடியோ!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Los Angeles #Whole Foods #பாலியல் தாக்குதல் #CCTV Footage #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story