×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லிப்ட்டில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.... நண்பர்களுடன் விளையாடும் போது நடந்த விபரீதம்! 12 வயது சிறுவன் பரிதாப பலி! அதிர்ச்சி வீடியோ!!!

மும்பை குர்லாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் விளையாடிய 12 வயது சிறுவன் லிப்ட் துவாரத்தில் விழுந்து உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மும்பை குர்லா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன், Lift Shaft-இல் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டின்போது நேர்ந்த சோகம்

நேரு நகர் பகுதியில் உள்ள 'ஷமிம் டவர்' குடியிருப்பின் 10-வது மாடியில் வசித்து வந்த முகமது ஜைன் ஜமீர் தாசில்தார் என்ற சிறுவன், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த லிப்டின் வெளிப்புற கதவின் மீது சாய்ந்தபோது திடீரென சமநிலையை இழந்ததால், கதவு திறந்து லிப்ட் துவாரத்திற்குள் கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை

இதனால் பலத்த காயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சியோன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை சென்றடையும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்.... பால்கனியில் துணி காயப்போடும் போது நடந்த அதிர்ச்சி! திருமணம் ஆன 6 மாதத்தில் இளம்பெண் மருத்துவமனையில்..... அதிர்ச்சி காட்சி!!!

சிசிடிவி ஆதாரமாக போலீஸ் விசாரணை

இந்த CCTV காட்சிகள் முழுவதும் பதிவாகியுள்ளதால், அவற்றை முக்கிய ஆதாரமாக வைத்து நேரு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக லிப்ட் பராமரிப்பில் அலட்சியம் இருந்ததா, பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: கையை அசைத்து என்னை காப்பாத்துங்க... கத்தியும் யாருமே உதவிக்கு வரல! விளையாட்டுன்னு நினைத்த கொடுமை.... கண்ணெதிரே துடிதுடித்து இறந்த 33 வயது வாலிபர்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kurla Lift Accident #மும்பை #Lift Shaft #சிறுவன் உயிரிழப்பு #cctv
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story