இயற்கையின் அதிசயம்..! வீணாக கொட்டப்பட்ட முட்டைகளிலிருந்து வெளியேறிய கோழி குஞ்சுகள்! வைரலாகும் வீடியோ.
Kiran bedi Twitter video little hen

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்நோய் இந்தியாவிலும் மிக விரைவாக பரவி வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கோழி கறியின் மூலம் தான் கொரோனா பரவுகிறது என்ற ஏற்ப்பட்ட வதந்தியை அடுத்து மக்கள் கோழிகளை சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். இதனால் கோழிகளை விற்பனை செய்த முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டது.
இதனால் சில முதலீட்டாளர்கள் கோழியை இலவசமாகவும், குழி தோண்டி புதைத்தும், குறைவான விலைக்கும் விற்பனை செய்து வந்தனர். அதேபோல் குப்பை மேட்டில் கொட்டப்பட்ட முட்டைகள் அனைத்தும் ஒரு வார காலங்களுக்கு பிறகு குஞ்சுகளாக வெளியேறியுள்ளன.
தற்போது அதன் வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரன் பேடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த பலரும் இது உண்மை கிடையாது என கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் வெளியான அந்த வீடியோ உண்மையா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.