×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஷக் காளான்களை பயன்படுத்தி எப்படி கொலை செய்வது? காதலியின் கூகுள் தேடல்.. லோகட்டில் முன்கூட்டியே விட்ட நோட்டம்! கொலையில் வெளிவந்த 5,053 பக்க பகீர் ரகசியம்.... தலைசுற்ற வைக்கும் பின்னணி..!!!

புனே கேதன் அகர்வால் கொலை வழக்கில் 5,053 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூகுள் தேடல்கள், லோகட் நோட்டம் உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

புனேவில் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில், காவல்துறை 5,053 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கொலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் திட்டமிடல்கள் குறித்த பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்ட சியா கோயலின் மொபைல் மற்றும் இணைய தேடல் பதிவுகள் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளன.

கொலைக்கு முன் நடந்ததாக கூறப்படும் தேடல்கள்

குற்றப்பத்திரிகையின்படி, கேதன் அகர்வால் கொல்லப்படுவதற்கு முன்பு சியா கோயல் கூகுளில் ‘சோனம் வழக்கு’ மற்றும் ‘விஷக் காளான்களைப் பயன்படுத்தி கொலை செய்வது எப்படி’ உள்ளிட்ட தலைப்புகளில் தேடியதாக கூறப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய மொபைல் தரவுகள், சாட்டிங் பதிவுகள், அழைப்பு விவரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் போலீஸார் சேகரித்துள்ளனர்.

இதையும் படிங்க: உடம்பெல்லாம் சிலிர்க்குது..! கிங் கோப்ராவுக்கு முன் தலைகீழாக படுத்து... லிப் லாக் கிஸ் வேற..! திகில் காட்சியை பாருங்க..!!!

லோகட் பகுதியில் முன்கூட்டியே நோட்டம்

விஷக் காளான் தொடர்பான திட்டத்துக்குப் பின்னர், கொலை செய்வதற்கான இடமாக லோகட் பகுதி தேர்வு செய்யப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை முன்கூட்டியே சென்று பார்த்ததாகவும், அங்குள்ள சூழலை நோட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மலையேற்றம் என்ற பெயரில் அழைத்துச் சென்றதாக தகவல்

இதையடுத்து, கடந்த மே 31-ஆம் தேதி மலையேற்றத்துக்கு செல்லலாம் என கூறி கேதன் அகர்வாலை லோகட் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அங்கு அவரை பள்ளத்தாக்கிற்குள் தள்ளி கொலை செய்ததாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். 5,053 பக்க குற்றப்பத்திரிகை மூலம் வெளியாகியுள்ள இந்த தகவல்கள், வழக்கின் விசாரணையில் சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் சாட்சிய ஆதாரங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இதையும் படிங்க: அழுது கொண்டிருந்த தாய்... பிறந்தது முதல் பார்வை இன்றி தவித்த குழந்தை! சிகிக்சைக்கு பிறகு முதன்முறையாக தாயின் முகத்தை பார்த்து குழந்தை செய்த அந்த ஒரு செயல்.... அழகிய காட்சி!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கேதன் அகர்வால் கொலை #Ketan Agarwal murder #சியா கோயல் #புனே கொலை வழக்கு #Lohagad murder case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story