தலை முதல் பாதம் வரை காயம்.. ரணசித்ரவதை மரணம்? 22 வயது மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் ஷாக் தகவல் அம்பலம்.!
Indian Student Killed in Uzbekistan: உஸ்பெகிஸ்தானில் படித்து வந்த கேரளா மாணவி உடன் படித்த சக மாணவரால் கொலை செய்யப்பட்டார்.
22 வயது கேரளா மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவம் படிக்க மேலை நாட்டுக்குச் சென்ற மாணவி சடலமாக வீடு திரும்பும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கல்லூரி மாணவர்கள்:
Kerala Girl Killed: கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டம், பிள்ளைபுழா பகுதியில் வசித்து வருபவர் சவரியா பசுந்த் (வயது 22). இவரின் தந்தை பசுந்த் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது சவரியா உஸ்பெகிஸ்தானில் உள்ள கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இவருடன் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சரத்துல் அனம் (வயது 22) என்ற மாணவரும் படித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: சித்தி மகளுடன் கள்ளக்காதல்.. 20 வயது கல்லூரி மாணவி கொலை.. கணவனின் கொடூரம்.. திருவள்ளூரில் பயங்கரம்.!
கொலை:
இவர்கள் இருவரும் அங்குள்ள கேரளாவைச் சேர்ந்த மாணவர்களுடன் அறையெடுத்து தங்கி இருக்கின்றனர். இதனிடையே, சம்பவத்தன்று சவரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அவரது குடும்பத்தினருக்கு உஸ்பெகிஸ்தான் காவல்துறையினர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளால் தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக, துபாயில் வேலை பார்த்து வரும் சவாரியாவின் மாமா, இளம்பெண்ணின் உடலை கேரளா கொண்டு வர உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளார்.
உடலில் காயங்கள்:
அங்கு மருத்துவ பரிசோதனைக்குப்பின் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடலில் தலை முதல் பாதம் வரை காயங்கள் இருந்துள்ளது. லேப்டாப் போன்ற பொருள் கொண்டு கொடூரமாக தாக்கப்பட்டது போல உடலில் காயங்கள் இருந்ததாக பெண்ணின் மாமா தெரிவித்துள்ளார். மேலும், மதம்மாற்றம் தொடர்பான முயற்சி குறித்த சித்ரவதை மரணம் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் இதுகுறித்து கேரளாவிலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபிரேத பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குற்றவாளி கைது:
மகள் மருத்துவம் படித்துவிட்டு வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோர், மகளின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஒரே மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து பயின்று வந்த நிலையில், அங்கு நடந்துள்ள இந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை குற்றவாளியான ஷரத்துல் அனம் உஸ்பெகிஸ்தான் காவல்துறையினரின் பிடியில் இருக்கிறார். கொலை சம்பவம் நடந்த அதே நாளில் அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்.. 32 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? நிர்வாணமாக சடலம் மீட்பு.!