நெரிசலில் சிக்கி 14 பள்ளிக் குழந்தைகள் உயிர் இழப்பு.! 40 பேர் படுகாயம்... நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம்..!
Kenya school students died
கென்யா நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென ஏற்பட்ட நெரிசல் காரணமாக 14 மாணவர்கள் நெரிசலில் சிக்கி உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் மெக்கா நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வரும் நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு மாணவர்கள் கூட்டமாக வெளியேறியுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 மாணவர்கள் மூச்சு திணறி உயிர் இழக்க, 40 மவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதனால் நெரிசல் ஏற்பட்டது? மாணவர்கள் திடரீன பீதியடைந்து ஓட என்ன காரணம்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் அங்குள்ள பள்ளிகளில் அடிக்கடி இதுபோன்று நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.