டிரைவரின் அதிவேகத்தால் நடந்த அதிர்ச்சி.... சுற்றுலாப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து 20 பேர் படுகாயம்! கொலை நடுங்க வைக்கும் காட்சி!!!
கராச்சி அருகே கின்ஜார் ஏரிக்கு சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகே உள்ள பிரபல சுற்றுலாத் தலமான கின்ஜார் ஏரிக்கு சென்ற சுற்றுலா பேருந்து சாலை ஓரத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிவேகத்தில் சென்ற பேருந்து
தகவலின்படி, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து அதிக வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது. விபத்து நடந்ததும் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பகீர் வீடியோ! சாக்கடைத் தண்ணீரில் ரோட்டோர கடையில் சமையலா....இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி காட்சி!!!
சில பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரலாகும் விபத்து காட்சி
இந்த விபத்து தொடர்பான வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், பேருந்து வேகமாக வந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர் மீது கடும் விமர்சனம்
விபத்திற்குக் காரணம் ஓட்டுநரின் அஜாக்கிரதையான வேகமே என சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். பயணிகளின் உயிரை பணயம் வைத்ததாக கூறி, சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுலா பயணிகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.