இனிமேல் உன் வாயில் அந்த வார்த்தை வந்தால் ஃபைலை க்ளோஸ் பண்ணிடுவேன்! இளம் வக்கீலை வறுத்தெடுத்த நீதிபதி..... இணையத்தில் வைரலாகும் 8 நொடிகள் வீடியோ..!!!
நீதிமன்றத்தில் ‘யா.. யா..’ என பதிலளித்த இளம் வக்கீலை நீதிபதி கடுமையாக எச்சரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
நீதிமன்றத்தில் பேசும் போது கடைப்பிடிக்க வேண்டிய மரியாதை மற்றும் நாகரிகம் குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. வெறும் 8 நொடிகள் மட்டுமே கொண்ட அந்தக் காட்சியில், இளம் வயது வக்கீல் ஒருவரை நீதிபதி நேரடியாகக் கண்டிக்கும் தருணம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அவர் பயன்படுத்திய பேச்சு நடைதான் இந்த விவகாரத்தை இணையத்தில் டிரெண்டாக்கியுள்ளது.
‘யா.. யா..’ பதிலால் கடுப்பான நீதிபதி
எக்ஸ் தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு இளம் வக்கீல் தொடர்ந்து ‘Yeah.. Yeah..’ என்று பதிலளிப்பது கேட்கப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, “நீ எங்கிருந்து வருகிறாய்? இந்தூரிலிருந்தா? அங்கெல்லாம் இப்படித்தான் பேசுவார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
அதன்பின், “பாதி இந்தி, பாதி இங்கிலீஷ் பேசிட்டு, அதுலயும் ‘யா.. யா..’ என்கிறாய்” என்று கடுமையாக சாடியுள்ளார். இந்த உரையாடல் தான் தற்போது வைரல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நம்பவே முடியல... பிறந்த கொஞ்ச நேரத்துலயே கையை ஊன்றி உட்கார்ந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்து போன நர்ஸ்.... தீயாய் பரவும் வீடியோ!!!
“இது காபி ஷாப் இல்லை”
வக்கீலின் பேச்சு முறையால் மேலும் கோபமடைந்த நீதிபதி, “நீ நண்பர்களுடன் காபி ஷாப்பில் அமர்ந்து பேசவில்லை. இது நீதிமன்றம். ஒழுங்காகப் பேச கற்றுக்கொள்ள வேண்டும்” என்று எச்சரித்தார்.
மேலும், “இன்னொரு முறை ‘யா’ என்ற வார்த்தை உன் வாயில் இருந்து வந்தால், உன் ஃபைலை க்ளோஸ் செய்து திருப்பி அனுப்பிவிடுவேன்” என்றும் கூறியதாக அந்த வீடியோவில் தெரிகிறது. இதையடுத்து வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெட்டிசன்கள் ஆதரவு
இந்த காட்சி இணையத்தில் பரவியதும், நீதிமன்றங்களில் பேசும் போது மரியாதையான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நீதிமன்ற ஒழுக்கம் குறித்து இளம் வழக்கறிஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கனவு நினைவாகியும் அனுபவிக்க முடியல.... பணம் வரும் போகும், ஆனால் அதை இழக்க மனமில்லாமல் தேம்பி தேம்பி அழும் வாலிபரின் வீடியோ.!!!