இப்படி பண்ணிட்டாரே.... திருவள்ளுவரை திறக்காமல் திடீரென பறந்த முதலமைச்சர் விஜய்! ஏமாந்த தமிழ் மாணவர்கள்..!!!!
டெல்லி JNU வளாகத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்காமல் முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பியதால் தமிழ் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திறப்பு விழா கடைசி நேரத்தில் நடக்காமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட முதலமைச்சர் விஜய், சிலையைத் திறந்து வைக்காமல் திடீரென சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு JNU வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. தமிழர் பண்பாடு மற்றும் மொழி மரபை தேசிய அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்தச் சிலை பார்க்கப்பட்டது.
திறப்பு விழா எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்கள்
சிலை திறப்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் JNU-வில் படித்து வரும் தமிழ்த் துறை மாணவர்கள் பலரும் ஆர்வமாக காத்திருந்தனர். குறிப்பாக, முதலமைச்சர் விஜய் நேரில் வந்து சிலையைத் திறந்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் எந்தவித அதிகாரப்பூர்வ நிகழ்வும் நடைபெறாமல், அவர் திடீரென சென்னை திரும்பியதாக வெளியான தகவல் மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் அமைப்புகள் அதிருப்தி
இதையடுத்து டெல்லியில் செயல்பட்டு வரும் சில தமிழ் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. தேசிய தலைநகரில் தமிழரின் அடையாளமாக அமைக்கப்பட்ட JNU திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவலின்படி, நிகழ்ச்சி தொடர்பான இறுதி நேர மாற்றங்களே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அரசுத்தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: திடீரென கடைசி நேரத்தில் ரத்து செய்தார் முதல்வர் விஜய்..! அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு...!!!