×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு.! எனது அருமை நண்பர் மீதான தாக்குதலை கண்டு மிகவும் வேதனை அடைந்தேன்.! பிரதமர் மோடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு.! எனது அருமை நண்பர் மீதான தாக்குதலை கண்டு மிகவும் வேதனை அடைந்தேன்.! பிரதமர் மோடி

Advertisement

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார். இந்நிலையில், அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் மிது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சுட்டதில் அபேவின் முதுகுப்பக்கம் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்து மயங்க நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கவலையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளதாக பல நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், எனது அருமை நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதலை கண்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவருக்காகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் ஜப்பான் மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், அவர்களுக்கு ஆதரவாக நமது எண்ணங்களும் உள்ளன. என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#modi #japans ex pm
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story