×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மரண பயத்தில் உலகம்! வானத்திலிருந்து கொட்டும் எண்ணெய் மழை! ஈரான்னில் அடுத்து அமில மழையாக மாறும் அபாயம்... நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை..!!!

டெஹ்ரானில் போர் தாக்குதல்களுக்கு பின் காற்றில் கலந்த ரசாயனங்கள் காரணமாக ‘எண்ணெய் மழை’ பெய்வதாக தகவல். இது அமில மழையாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை.

Advertisement

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு உலக கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்திய தாக்குதல்களின் பின்னர் காற்றில் கலந்துள்ள அபாயகரமான ரசாயனங்கள் காரணமாக அங்கு விசித்திரமான மழை நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலால் சேதமடைந்த எண்ணெய் நிலையங்கள்

போர் சூழ்நிலையால் டெஹ்ரான் நகரில் நிலைமை மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்களில் பல எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் பல்வேறு ஹைட்ரோகார்பன் சேர்மங்கள் அதிக அளவில் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

‘எண்ணெய் மழை’ குறித்து எழுந்த கவலை

இந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து மழை நீருடன் சேரும்போது, அது கருமையான துகள்களுடன் கூடிய எண்ணெய் மழை போல பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: கேர்ள் ப்ரெண்டுடன் நடுரோட்டில் பைக் சாகசம்… லாரிகளுக்கு இடையே புகுந்தபோது நேர்ந்த கோர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமில மழையாக மாறும் அபாயம்

நிபுணர்கள் கூறுவதாவது, இந்த ரசாயன கலவைகள் மழையுடன் சேரும்போது அது தீவிரமான அமில மழை ஆக மாறும் அபாயம் இருப்பதாகும். இதுபோன்ற மழை மனிதர்களின் உடல்நலத்திற்கும், தாவரங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெஹ்ரானில் உருவாகியுள்ள இந்த சுற்றுச்சூழல் பிரச்சினை, போர் தாக்குதல்கள் மனித உயிர்களுடன் மட்டுமல்லாமல் இயற்கை சூழலுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. அங்கு நிலவும் இந்த எண்ணெய் மழை குறித்த தகவல்கள் தற்போது உலகளாவிய கவலையாக மாறி வருகிறது.

 

இதையும் படிங்க: ARE YOU Ok? குவைத் வான் எல்லையில் அதிர்ச்சி! தவறுதலாக சுடப்பட்ட அமெரிக்கா போர் விமானம்! 6 வீரர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்! பெண் பைலட்டிடம் பாலைவனத்தில் குவைத் மனிதரின் மனிதநேயம்! நெகிழ்ச்சி வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Iran War News #Tehran Oil Rain #அமில மழை #Iran Air Pollution #Tehran Chemical Pollution
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story