டிரம்ப் தலைக்கு விலை அறிவித்தது ஈரான்! இந்திய மதிப்பில் எத்தனை கோடி தெரியுமா?
Iran offers 80 million us dollar for trump

ஈரான் - அமெரிக்கா இடையே போர் வரும் சூழல் நிலவி வருவதால் வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாக்தாதில் உள்ள விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் உயிரிழந்தனா்.
உயிர் இழந்த காசிம் சுலைமானியின் இருந்து ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியின் போது அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் பேசியுள்ளது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.
அதாவது, ஈரானில் 80 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், அதனை அடிப்படையாக கொண்டு யார் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையை கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு 80 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 500 கோடிக்கும் மேல்) அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் எனவும், இதற்காக ஈரான் மக்கள் ஆளுக்கு ஒரு டாலர் கொடுத்து உதவ வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.