×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

1624 பேரையும் ஒரே கிராமத்தில் புதைக்க முடிவு; சோகத்தில் மூழ்கியுள்ள இந்தோனேஷியா.!.!!

indonasia sunami 2018

Advertisement

இந்தோனேஷியாவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக எழுந்த சுனாமியின் காரணமாக இதுவரை பலியான 1624 பேரையும் ஒரே கிராமத்தில் புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது பலி எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டு இன்றுடன் எட்டு நாள் ஆகிறது. மிகப்பெரிய இழப்பையும் பாதிப்பையும் அந்நாடு சந்தித்து வரும் நிலையில் இனிமேல் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால்  தற்சமயம் தீவிரமான மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 என்ற அளவில் பதிவாகி இருந்தது. சுலசேசி தீவில் உள்ள பலு என்ற பகுதியில் இருந்த அனைத்து வீடுகளிலும் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்தது. இதனால் அங்கு உள்ள அனைத்து வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து மூழ்கடித்தது.

இதனால் அங்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இதுவரை இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 1624 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமேல் இறந்தவர்களின் உடல் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தற்சமயம் நிறைவடைந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை எங்கு புகைப்பது என்று திணறி வரும் நிலையில் இதற்காக ஒரு கிராமத்தையே தேர்ந்தெடுக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அங்குள்ள மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #indonasi sunami2018 #latest world news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story