அதிர்ச்சி! வணிக கப்பலில் சமையல்காரராக பணியாற்றிய இந்திய நபருக்கு நேர்ந்த கொடூரம்! போட்டவை பார்த்து கதறும் குடும்பத்தினர்... தகவல் எதுவும் இல்லாமல் தவிக்கும் குடும்பம்..!!!
எம்.டி ஹானர் 25 கப்பலில் பணியாற்றிய இந்திய சமையல்கலைஞர் முகமது தன்வீருஸ் ஜமான் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், உடலை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த எம்.டி ஹானர் 25 என்ற வணிகக் கப்பலில் சமையல்காரராக பணியாற்றிய இந்தியர் முகமது தன்வீருஸ் ஜமான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கப்பலில் இருந்து அவரது மோசமான நிலை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது மரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்காததால் குடும்பத்தினர் கடும் குழப்பத்திலும் மன உளைச்சலிலும் உள்ளனர்.
கப்பலில் இருந்து வந்த அதிர்ச்சி தகவல்
தன்வீருஸ் ஜமானின் உடல்நிலை மற்றும் மரணம் தொடர்பான காட்சிகள் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. கப்பல் நிர்வாகம் அல்லது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் இதுவரை சம்பவத்தின் முழு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என குடும்பத்தினர் கூறுகின்றனர். இதனால் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
உடலை மீட்க அவசர கோரிக்கை
தகவல் அறிந்த இந்திய மாலுமிகள் சங்கம், தன்வீருஸ் ஜமானின் உடலை பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், கென்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்புகளுக்கும் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினருக்கு தகவல் வழங்க வலியுறுத்தல்
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தன்வீருஸ் ஜமானின் மரணம் தொடர்பான உண்மை நிலையை குடும்பத்தினருக்கு உடனடியாக தெரிவிப்பதுடன், உடலை மீட்டு இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மாலுமிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
https://twitter.com/FSUIINDIA/status/2105201945472287033
இதற்கிடையில், கப்பலில் நிகழ்ந்ததாக கூறப்படும் மரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணை மற்றும் தகவல்களுக்காக அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். உடலை பாதுகாப்பாக மீட்டு, மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவலை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: அண்ணா..! என்னால முடியல... என்னை வீட்டுக்குக் கூட்டிட்டு போங்க! கண்ணீருடன் உதவி கேட்ட 8 வயது சிறுவன்..! பகீர் பின்னணி..!!!