×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியா உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது; ரஷ்ய வெளியுறவு அமைச்சர்...!

இந்தியா உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது; ரஷ்ய வெளியுறவு அமைச்சர்...!

Advertisement

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம் என்று தெரிவித்தார். 

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், முக்கிய பங்கு வைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம். 

ஆசிய நாடுகளில் இந்தியா செல்வாக்குடன் உள்ளது. இந்தியா மற்றும் சீனாவை பற்றி கூற வேண்டுமானால், இரு நாடுகளும் அந்தந்த பிராந்தியங்களுக்கான அதிகார மையங்களாக உள்ளன. செயல்படுகின்றன. 

எனவே, உலக அளவில் அவர்களின் திறனை புறக்கணிக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் கோரிக்கைக்கு ரஷ்யா ஆதரவாக உள்ளது. இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான ஆதரவை ரஷ்யா அளிக்கும்.

பிராந்திய அமைப்புகளிலும் இந்தியாவின் பங்கு மிகவும் அதிகமாக உள்ளது. உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும், முட்டுக்கட்டை போடுகின்றன என கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #India Important Role in the Global Economy #Russian Foreign Minister
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story