×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மசூத் அசாரை சட்டத்தின் முன் நிறுத்த தயார்; பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு.!

india - pakistan - mazuth azar - muhamed curasy

Advertisement

மசூத் அசாருக்கு எதிரான ஆதாரங்களை இந்தியா அளித்தால் அவரை சட்டத்தின் முன் நிறுத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது கோழைத்தனமாக தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் இன்று உலக நாடுகள் சில ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது.

 

இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர்கள், இந்தியா- பாகிஸ்தான் எல்லை ஓரம், மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் முகாம் மீது சுமார் 1000 கிலோ எடைகொண்ட குண்டுகளை வீசி பதறவைக்கும் பதிலடி கொடுத்துள்ளது. 

இந்த பயங்கர தாக்குதலில், சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் தற்சமயம்  உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளார் என்றும் அவருக்கு எதிரான ஆதாரங்களை இந்தியா அளித்தாள் சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Pakistan #mazut azar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story