உள்நாட்டுப்போரால் பயங்கரம்.. சிரியாவில் 1000 பேர் பலி.. அதிரவைக்கும் தகவல்.!
உள்நாட்டுப்போரால் பயங்கரம்.. சிரியாவில் 1000 பேர் பலி.. அதிரவைக்கும் தகவல்.!
சிரியா நாட்டில் அல்-ஆசாத் தலைமையிலான அரசு, டிசம்பர் மாதம் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின் அதிபர் பொறுப்பில் இருந்த ஆசாத், ரஷியா நாட்டுக்கு தப்பிச் சென்றார். இதனால் சிரியாவில் ஆட்சியை கைவசப்படுத்திய ஹயத் தஹீர் அதிபராக பொறுப்பேற்று செயல்பட்டார்.
அதேநேரத்தில், முன்னாள் அதிபர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள், குழுவாக பிரிந்து சிரிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் சிரியா அரசபடை - கிளர்ச்சிக்குழு இடையே மோதல் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: வகுப்பறை நேரத்தில் ஆபாச படம் பார்த்து வசமாக சிக்கிக்கொண்ட ஆசிரியர்.. மாணவர்களுக்கும் ஒளிபரப்பி ஷாக்.!
இந்நிலையில், சிரியாவில் உள்ள கடற்கரை நகரம் லடாக்கியா, டடோஸ் மாகாணம் ஆகிய பகுதிகளில் 2 நாட்களாக கிளர்ச்சியாளர்கள் குழு - பாதுகாப்புப்படை இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.
ஆயிரம் பேர் மரணம் உறுதி
சோதனைச்சாவடி, இராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அரசபடை பதிலடியும் கொடுக்கிறது. இந்த மோதலில் தற்போது வரை 1000 பேர் மொத்தமாக உயிரிழந்த நிலையில், இவர்கள் 745 பேர் அப்பாவிப்பொதுமக்கள் ஆவார்கள்.
148 கிளர்ச்சி படையினரும், 125 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளனர். போர் தொடர்ந்து நடந்து வருவதால், அதிகம் சண்டை நடைபெறும் இடத்திற்கு, சிரியா தனது அரசுப்படைகளை அனுப்பி வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கிய மழை.. பாய்ந்தோடிய வெள்ளம்.. இந்தோனேஷியாவில் சோகம்.. பலி எண்ணிக்கை உயர்வு.!