திடீரென வெடித்துசிதறிய எரிமலை; தலைதெறிக்க சிதறியோடிய சுற்றுலாப்பயணிகள்.!
திடீரென வெடித்துசிதறிய எரிமலை; தலைதெறிக்க சிதறியோடிய சுற்றுலாப்பயணிகள்.!

எரிமலையின் அழகை ரசிக்கச் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு எரிமலை மரண பீதியை தந்துள்ளது.
எரிமலை:
உலகம் முழுவதும் அமைதியாக குமுறிக்கொண்டு இருக்கும் எரிமலைகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வப்போது, இவை சீற்றத்துடன் வெடித்து அழிவையும் உண்டாக்குகிறது.
இதையும் படிங்க: Video: டாம் குரூஸுக்கே டப் கொடுத்த இளைஞர்.. நண்பர்களை தண்ணீரில் தள்ளிவிட்டு தப்பிய தருணம்.!
வெடித்துசிதறிய எரிமலை:
இந்நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள எட்ணா மலை மீது அமைந்துள்ள எரிமலை வெடித்து சிதறியது. சுற்றுலா பயணிகள் அங்கு இருந்தபோதே எரிமலை வெடிப்பு சம்பவம் நடந்தது. இதனால் பலரும் உயிரை கையில் பிடித்து ஓட்டம் பிடித்தனர்.
கரும்புகை சூழ்ந்தது:
எரிமலை வெடித்ததன் விளைவாக கரும்புகை வெளியேறிய காரணத்தால் சாம்பல் மேகங்கள் தென்பட்டன. தூரத்தில் இருந்த மக்கள் பலரும் அதனை ஆர்வத்துடன் பார்த்தனர். எரிமலை வெடிப்பு தொடருவதால் பாதுகாப்பு கருதி அபாயகட்ட இடங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மவுண்ட் எட்ணா ஐரோப்பாவில் மிக அதிக செயல்பாட்டில் இருக்கும் எரிமலையில் ஒன்றாகும்.
எரிமலை வெடித்ததால் ஓட்டமெடுத்த சுற்றுலாப்பயணிகள்:
எரிமலை வெடிப்பின் காணொளி:
இதையும் படிங்க: ஆண்களிடம் அதிகரித்த தற்கொலை.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்.!!