இளம் நடிகையை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன் -அதிர்ச்சியில் பெற்றோர்!
ilam nadaikai murder in rasiya

ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் மாடலிங் நடிகை எக்டரினா கரெக்டொலவா. இந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் மிகவும் புகழ்பெற்றவர். 27 வயதான இந்த இளம் பெண்ணுக்கு தற்போது வரை 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.
இவர் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளவர் . ஆனால், சில நாட்களாக எக்டரினா காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
போலீசார், மாஸ்கோவில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது அவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அங்கு உள்ள சிசிடிவி கேமிரா பதிவை சோதனையிட்ட போது அவரின் முன்னாள் காதலர் சூட்கேசுடன் செல்லும் காட்சி இருந்ததாம். இதனால் அவர் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என தெரியவந்ததால் அவரை காவல் துறையில் கைது செய்துள்ளனர்.