வேகமாக உருகும் பனி பாறைகள்! விரைவில் அழிய போகிறதா உலகம்! என்ன சொல்கிறது விஞ்ஞானம்?
Ice mount meting at arctic ocean

உலகின் வெப்பமயமாவதால் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனி பாறைகள் வெப்பத்தால் உருக தொடங்கியுள்ளன. இவரு பனி பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் அதிகரித்து கடல் நீர் நில பகுதிகளுக்குள் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவாறு கடல் நீர் நில பகுதிக்குள் வரும் பொது சுனாமி போன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க நேரிடும். இதனால் உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
இந்நிலையில், முதன்முறையாக ஆர்ட்டிக் கடலின் மிகப் பழமைவாய்ந்ததும்,
மிகவும் தடிப்பானதுமான கடல் பனி வெப்பத்தால் உருகுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த பாறைகள் உருக தொடங்குவது இது முதல் முறை அல்ல, இது இரண்டாவது முறை என்கின்றனர் விஞானிகள்.
கிரீன்லாந்தின் வட பகுதியில் இப் பனிக்கட்டித் திடல் உடைந்து நீரை வெளியேற்றியுள்ளது. இப் பகுதி பொதுவாக கோடை காலங்களிலும் உறை நிலையில் காணப்படுவது வழமை.
இச் செயற்பாடு பகுதியாக காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்ப அலைகள் மற்றும் வெதுவெதுப்பான காற்றுக்களால் உருவாகின்றது.
இந்த பனி பாறைகள் உருகுவதால் அங்கு வாழும் கடல் நாய்கள் மற்றும் துருவ கரடிகள் அழிய கூடும் என்கின்றனர் விஞானிகள்.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், ஆர்ட்டிக்கின் பெரும்பாலான பனித் திட்டுக்கள் பல வருட பனித் திட்டக்களாக இருந்தன. ஆனால் தற்போது அவை சுருங்கி தற்போது கிட்டத்தட்ட எல்லா திட்டுக்களும் முதல் வருட திட்டுக்களாகவே உள்ளன.
மேலும் பல வருட திட்டுக்கள் காணப்பட்டிருந்த வலயமாக கிரீன்லாந்தின் வடபகுதி காணப்பட்டிருந்தது. தற்போது அதுவும் கடற்கரையிலிருந்து நகர்ந்துள்ளதாக விஞானிகள் தெரிவித்துள்ளார்.