×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனக்கு கொரோனா வைரஸ் உள்ளது! சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து இளைஞர்கள் செய்த மோசமான காரியம்! வைரலாகும் வீடியோ!

'I have the Coronavirus Man wearing sign sprays Lysol on merchandise at Walmart

Advertisement

அமெரிக்கா இல்லினாயிஷிலுள்ள வால்மார்ட் என்ற சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர்கள் இருவர் தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது என்ற வாசகம் எழுதிய உடையை அணிந்து உள்ளே நுழைந்துள்ளனர். அவர் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதாக கூறி தனது கையில் வைத்திருந்த லைசாலை அங்கிருந்த பொருட்கள் அனைத்தின் மீதும் ஊற்றியுள்ளார். அதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.

கொரோனா வைரஸால் சீனா மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் உள்ள  மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அதனை வேடிக்கையாக வைத்து இவரை போன்று சிலர் இவ்வாறு  செய்யும் மோசமான செயல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும் அவர் செய்த செயலால் உடைகள், மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் 10000 டாலர்கள் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரை வதற்கு முன்பே இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coronovirus #super market #lysol
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story