புற்றுநோய்யால் போராடும் மனைவி! முடியை தொட்டாலே வலி..... மனைவிக்காக நொடிப்பொழுதில் கணவன் செய்த செயல்! கண்கலங்கி நின்ற மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை....இவ்வளவு தாங்க வாழ்க்கை!!!
புற்றுநோயால் சிகிச்சை பெற்று வரும் மனைவிக்காக கணவரும் மொட்டை அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக கணவர் ஒருவர் எடுத்த முடிவு, சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கீமோதெரபி சிகிச்சையால் கூந்தலை இழந்த மனைவிக்கு துணையாக, அவரும் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நம்ரதா நிதின் கோயல் என்ற பெண், புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகிறார். கீமோதெரபி காரணமாக அவரது தலைமுடி வேகமாக உதிரத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் முடியைத் தொடுவதற்கே வலி ஏற்பட்டதால், முழுமையாக முடியை அகற்ற அவர் முடிவு செய்துள்ளார்.
மனைவிக்காக கணவர் எடுத்த அதிரடி முடிவு
நம்ரதா பகிர்ந்த வீடியோவில், அவர் நாற்காலியில் அமர்ந்தபடி மொட்டை அடித்துக் கொள்கிறார். அப்போது அவரது கணவர் அருகில் இருந்து மிகவும் அன்புடன் உதவி செய்கிறார். சில நொடிகளில் யாரும் எதிர்பாராத விதமாக, ட்ரிம்மரை எடுத்த அவர் தனது தலைமுடியையும் அகற்றத் தொடங்கினார்.
இதையும் படிங்க: Video : ஈரோட்டை அதிரவைத்த விஜய்யின் ‘மாஸ்’ செல்ஃபி! வீடீயோவை வெளியிட்ட விஜய்! இணையத்தில் செம வைரல்!
இதைக் கண்ட நம்ரதா கண்கலங்கியபடி அவரை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த தருணமே பலரது மனதையும் உருக்கியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நம்ரதா, “நீ உனது முடியை மட்டும் வெட்டவில்லை, என் துயரத்தையும் உன் தோளில் சுமந்தாய்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வரிகள் பலரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
வீடியோவை பார்த்த இணையவாசிகள், “உண்மையான அன்பு இதுதான்”, “ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை கிடைக்க வேண்டும்” என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ, நோயுடன் போராடும் ஒருவருக்கு குடும்பத்தின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது. மருந்துகளை விட அன்பும் அரவணைப்பும் பல நேரங்களில் பெரிய ஆறுதலாக மாறுகின்றன என்பதையும் இந்த தருணம் உணர்த்தியுள்ளது.