×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல உணவகத்தின் சமையலறையில் ஊழியர் செய்த அருவருப்பான காரியம்! சுகாதார துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

hotel worker urinating in kitchen

Advertisement

அமெரிக்காவில் உடாஹ் என்ற இடத்தில் ரச்சேரிடோ’ஸ் மெக்ஸிகன் என்ற உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் விரும்பி உணவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த உணவகத்திற்கு உணவு வாங்க  காரில் வந்த ராபர்ட் தலீவாகோலா என்பவர் அந்த உணவகத்தின் சமையலறையின் ஒரு மூலையில் ஊழியர் ஒருவர் சிறுநீர் கழிப்பதை கண்டுள்ளார். மேலும் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து வெளியே கூறினால் யாரும் நம்பமாட்டார்கள் என எண்ணிய அவர் உடனே அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் அதனை பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் அந்த உணவகத்தை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது

மேலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுகுறித்த வீடியோவை கண்டவுடன் உணவகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளனர். மேலும் உணவகம்  முழுவதும் கிருமி நீக்கம் செய்யப்பட உள்ளது.  அதனை தொடர்ந்து உணவுப்பொருள்களின் ஆரோக்கியம் ஆய்வு செய்தபிறகே உணவகத்தை திறப்பது குறித்து உறுதி செய்யப்படும். மேலும் உணவகத்தில் பணிபுரிபவர்கள் தக்க பயிற்சி பெற்றுள்ளார்களா என்பது சோதனை செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் எனவும் கூறியுள்ளனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#restaurant #urinating #America
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story