உறைபனியில் கூட உடலை விட்டு பிரியாது நின்ற நாய்! ஒரே இடத்தில் 4 நாட்கள் உணவின்றி அப்படியே..... கண்ணீர் வரவைக்கும் காட்சி!
இமயமலையின் கடும் குளிரில் உயிரிழந்த சிறுவனின் உடலை நான்கு நாட்கள் பிரியாமல் காத்த நாயின் விசுவாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இமயமலையின் கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனிக்கிடையிலும் மனித நேயத்தை நினைவூட்டும் ஒரு சம்பவம் தற்போது பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது. உயிரிழந்த தனது இளம் உரிமையாளரை விட்டு பிரியாமல் நான்கு நாட்கள் காவல் காத்த நாயின் விசுவாசம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மலையேற்றத்தில் மாயமான சிறுவர்கள்
சம்பா பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பியூஷ் குமார் மற்றும் அவரது உறவினர் விக்ஸித் ராணா ஆகியோர் கடந்த ஜனவரி 23ஆம் தேதி மலையேற்றத்திற்கு சென்ற போது திடீரென மாயமானார்கள். பூஜ்ஜியத்திற்கும் கீழான வெப்பநிலை மற்றும் முழங்கால் அளவு பனிப்பொழிவு அவர்களின் தேடுதலை கடினமாக மாற்றியது.
உறைபனியில் கூட உடலை விட்டு பிரியாத நாய்
இந்த கடுமையான சூழ்நிலைகளிலும் பியூஷின் வளர்ப்பு நாய் அவனது உடலின் அருகிலேயே இருந்து உரிமையாளரின் உடலை பாதுகாத்து வந்தது. உணவு இல்லாமல், போதிய வெப்பம் இல்லாமல் இருந்தாலும் அந்த நாய் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: அந்த மறுபிறவி இதுதான்..... பனிக்கு அடியில் புதைந்த கிடந்த உடல்! வெளியில் தெரிந்த ஒரு கை.... நெஞ்சை பதறவைக்கும் காட்சி!!!
ராணுவ மீட்பு நடவடிக்கை
நான்கு நாட்கள் கழித்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, இருவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது கடும் பசியால் சோர்வடைந்த நிலையிலும் அந்த நாய் தனது சிறிய உரிமையாளரின் அருகில் நின்றபடி காவல் காத்தது. இந்த காட்சியை கண்ட மீட்புக் குழுவினர் நெகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தனர்.
தற்போது அந்த விசுவாசமான நாய் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிய பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இமயமலையின் கடும் குளிரிலும் மனித உணர்வுகளை மிஞ்சிய இந்த நாயின் அன்பு, உறவுகளின் மதிப்பை மீண்டும் நினைவூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: உறைபனியில் கூட உடலை விட்டு பிரியாது நின்ற நாய்! ஒரே இடத்தில் 4 நாட்கள் உணவின்றி அப்படியே..... கண்ணீர் வரவைக்கும் காட்சி!